News January 22, 2025

பைக் வாங்க டாடா ஏசி வாகனத்தை திருடிய 3 பேர் கைது

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தனியார் மினரல் வாட்டர் டேங்கர் டாடா ஏசி வாகனத்தை திருடி உடைத்து விற்பனை செய்து விலை உயர்ந்த டூவீலர் வாங்குவதற்காக கடத்திச் சென்றனர். இதில் காரியாபட்டி பனிக்கனேந்தலை சேர்ந்த அஜய் (24), அருண்பாண்டியன் (23), பிச்சம்பட்டியைச் சேர்ந்த சக்திமுருகன் (24) ஆகிய மூன்று பேரை அதிரடியாக கைது செய்து காரியாபட்டி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Similar News

News April 29, 2025

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள கலெக்டர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் மே 1 ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவீனம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், வரி மற்றும் வரியில்லா இனங்களை இணைய வழி செலுத்த உறுதிப்படுத்துதல் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள கலெக்டர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.

News April 29, 2025

விருதுநகர்: வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்போன் எண்கள்

image

▶️இராஜபாளையம் -7402608277

▶️ஸ்ரீவில்லிபுத்தூர் – 7402608281

▶️வத்திராயிருப்பு – 7402608285

▶️சிவகாசி – 7402608289

▶️வெம்பக்கோட்டை – 7402608294

▶️சாத்தூர் – 7402608298

▶️விருதுநகர் – 7402608303

▶️அருப்புக்கோட்டை – 7402608309

▶️காரியாபட்டி – 7402608313

▶️திருச்சுழி – 7402608317

▶️நரிக்குடி – 7402608321
இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.!

News April 29, 2025

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

image

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி ஸ்டான்டர்டு பட்டாசு ஆலையில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்கனவே 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில் 100% தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.புதுப்பட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி 58, என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!