News January 2, 2025
பைக் மீது மாடு மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரி (52), தனது மகன் சிவராமனுடன் நேற்று (ஜன.1) இருசக்கர வாகனத்தில் குன்றத்தூரில் இருந்து நந்தம்பாக்கம் சென்றார். அப்போது, மாடு ஒன்று திடிரென சாலையை கடக்க முயன்றபோது, சிங்காரி மீது மாடு இடித்தது. இதில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.17) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
காஞ்சிபுரம்: காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான அறிவிப்பானது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் 22.09.2025 முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
News September 17, 2025
காஞ்சிபுரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 வது கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அறிவிக்கபட்டுள்ளது. நாளை (18.09.2025) மாங்காடு நகராட்சி, ரகுமான் மண்டபம், பட்டூர், மாங்காடு, குன்றத்தூர் ஒன்றியம், சாலமங்கலம் ஊராட்சி சமுதாய நலக்கூடம், குன்றத்தூர் நகர்ப்புற பஞ்சாயத்து, இரண்டாம் கட்டளை ஊராட்சி, ரெட்டியார் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள திறந்தவெளி மைதானம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.