News March 31, 2025
பைக் மீது பேருந்து மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ், ராகவன். நண்பர்களான இருவரும், நேற்று (மார்.30) காலை பைக்கில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றனர். பைக்கை ராகவன் ஓட்டினார். அப்போது எதிரில் வந்த அரசு விரைவு பேருந்து பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராகவன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Similar News
News February 16, 2026
விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 16, 2026
விழுப்புரத்தில் குடிநீரின்றி பறிதவிக்கும் மக்கள்!

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பூசாரிப்பாளையம் கிராமத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்பட்ட மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். ஆகையால், சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இதனை சீரமைத்து, குடி நீர் விநியோகம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
News February 16, 2026
விழுப்புரம் அருகே அதிரடி கைது!

காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் தலைமையிலான போலீசார் கருங்காலிப்பட்டு, அழகம்மாகோவில் குளக்கரை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக 2 பைக்கில் சென்ற, 3 பேரை மறித்து விசாரித்தனர். இந்த சோதனையில், அவர்களிடம் 21 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, மாம்பழப்பட்டைச் சேர்ந்த கணேசன்(37), பூங்காவனம்(42), விநாயகம்(51) ஆகியோரை கைது செய்தனர்.


