News April 2, 2025

பைக் மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி

image

திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் பைக்கில் சென்றவர்கள் மீது அவ்வழியே அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில், ஹரிதாஸ், அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

Similar News

News September 17, 2025

செங்கல்பட்டு: புரட்டாசி முதல் நாள் இங்கே செல்லுங்கள்

image

கடன் தொல்லை நீக்கும் ஆட்சீசுவரர்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் ஆட்சீசுவரர் கோயில் உள்ளது. புரட்டாசி முதல் நாளான இன்று இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 17, 2025

மதுராந்தகத்தில் உருவாகும் பிரமிக்கவைக்கும் நகரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனத்திடம் டெண்டர் கோரியுள்ளது. பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்து என்ன?.

News September 17, 2025

செங்கல்பட்டு: திருடிய வாகனத்தை உரிமையாளரிடம் விற்க முயற்சி

image

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், இவரது இருசக்கர வாகனத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் இருவர் திருடிச் சென்றனர். இந்நிலையில் OLX இணையதள வாயிலாக வாகனத்தின் உரிமையாளர் விக்னேஷ் இடமே திருடிய இருசக்கர வாகனத்தை விற்க முயன்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!