News March 22, 2025
பைக் மீது கார் மோதியதில் மாணவர் உயிரிழப்பு

வடக்கன்குளம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சபரிராம் ( 11 ) என்பவர் பணகுடி தனியார் மெட்ரிக் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்ததுள்ளார். நேற்று இவர் பள்ளி முடிந்து அவரது அண்ணன் ஹரிஹரனுடன் பைக்கில் வந்துள்ளார். அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியதில் சபரிராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து பணகுடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 21, 2025
நெல்லை: மாணவிக்கு பாலியல் தொல்லை: வார்டன் கைது

மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் மாணவிகளுக்கான தங்கும் விடுதியில் 14 வயதுடைய 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஆண் வார்டன் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அறிந்த பெற்றோர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணைக்கு பின் வார்டன் அபூபக்கர் (46) மற்றும் உடந்தையாக இருந்த பெண் வார்டன் வகிதா என்ற வசந்தி( 43) ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் இன்று கைது செய்தனர்.
News September 21, 2025
நெல்லை: இலவச வீட்டு மனை வேண்டுமா?

நெல்லை மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News September 21, 2025
நெல்லை: 62 வயது மூதாட்டி தற்கொலை

மூலைக்கரைப்பட்டி அருகே தெற்கு நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த 62 வயது ஆவுடையம்மாள், 23 ஆண்டுகளுக்கு முன் கணவர் டேனியல் இறந்த பிறகு, மகன் ஜெயபால் வீட்டருகிலுள்ள செட்டில் தனியாக வாழ்ந்தார். உடல் நலக்குறைவால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூலைக்கரைப் பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.