News July 9, 2024
பைக் சாகசமா? உடனே இதை செய்யுங்க

மதுரை மாநகரில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வண்ணம் இருசக்கர வாகனத்தில் சாகசம் (Bike Racing, Rash Driving, Wheeling) ஈடுபடுபவர்களை கண்டால் அந்த இருசக்கர வாகனத்தை வாகன எண்ணுடன் Photo அல்லது Video எடுத்து 88000-21100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க மாநகர் காவல் துறை தெரிவித்துள்ளனர். மேலும் சாகசத்தில் ஈடுபடுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
அரசு விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு

எழுமலை அருகே எம்.கல்லுப்பட்டி அரசு பள்ளி மாணவர் விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவர்கள் 15 பேர் இன்று காலை விடுதியில் வழங்கப்பட்ட இட்லி, சாம்பார், சட்னி உணவை சாப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து எழுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ, தாசில்தார், சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News July 9, 2025
மதுரை: மண்டல தலைவர்களின் ராஜினமா ஏற்பு

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு நிர்ணயம் செய்வதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் ஜூலை.7 அன்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி சரவண புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, பாண்டிசெல்வி, சுவிதா, வாசுகி, மூவேந்திரன், கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்திருந்த நிலையில், அவர்களின் கடிதத்தை ஆணையர் சித்ரா விஜயன் ஏற்றுக்கொண்டார்.
News July 9, 2025
தமிழகத்திலேயே அதிக வெயில் மதுரையில்

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் தினந்தோறும் வெயிலின் அளவு 100ஐ கடந்து சதமடித்து வருகிறது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106 டிகிரி வரை நேற்று வெயில் கொளுத்தியது.
மதுரை மாநகர் பகுதியில் 102 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது.