News September 7, 2025

பேர்ணாம்பட்டு: புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு

image

பேர்ணாம்பட்டு பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான முதல் கட்டமாக, பேருந்து நிலையம் அமைக்க தேவையான பரப்பளவுள்ள இடம் அதிகாரிகள் ஆய்வு செய்து தேர்வு செய்துள்ளனர்.தற்போதைய நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் பயணிகளுக்கான வசதிகள் மேம்படும் .

Similar News

News September 14, 2025

வேலூர்: 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

image

காட்பாடி பகுதியை சேர்ந்த சத்யா இவரது மகள் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காட்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 14, 2025

வேலூர்: ஒரே நாளில் குவிந்த மனுக்கள்

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 13) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறை தீர்க்கும் சிறப்பு முகாம் அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற்றது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான 153 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 14, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!