News March 19, 2024
பேரூராட்சி திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்.

தொண்டாமுத்தூர் பேரூராட்சி 10வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருபவர் ஸ்கைலாப் . இவர் நேற்று காலையில் பேரூராட்சி அலுவலகம் அருகில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டுள்ளார். அங்கு வந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாபு சுற்றுச்சுவர் கட்டக்கூடாது என கேட்டு கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 8, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (07.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
கோவையில் 5 முகம், 8 கரங்கள் கொண்ட முருகன்!

கோவை: அன்னூர் அருகே இரும்பொறையிலிருந்து 4 கி.மீ தொலைவில் ஓதிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் பழநி மலையை விடவும் பழமையானதாகும். ஓதிமலை முருகன் 5 தலையுடனும் 8 கைகளுடனும் காட்சி தருகிறார். பொதுவாக, அனைத்துக் கோயில்களிலும் மூலவர் சிலை பீடத்தின் மீதே நிறுவப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயில் மூலவர் முருகன் சிலை பாறையின் மீது நிறுவப்பட்டிருருப்பது விசேஷம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள இதை SHARE பண்ணுங்க!
News August 7, 2025
கோவையில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்!

கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஏழு மாதங்களில் 4,560 ஆன்லைன் மோசடி புகார்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இவற்றில், 350-க்கும் மேற்பட்டவை நிதி மோசடி சார்ந்த வழக்குகள் எனவும், 160-க்கும் மேற்பட்டவை பண இழப்பு சார்ந்த வழக்குகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 40-க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி புகார்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.