News August 25, 2024
பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்

திங்கள்சந்தை தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சுமன். இவர் நேற்று திங்கள்சந்தை பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தபோது கோணங்காடு மினி பஸ் உரிமையாளர் அருள்ராஜ்(59) உட்பட 3 பேர் அங்குவந்து, “பஸ் நிலையத்தில் வரும் மினி பஸ்சுக்கு இடையூறு செய்தால் உன்னை பஸ் ஏற்றி கொலை செய்து விடுவேன்” என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
ஆதிதிராவிட பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்

தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகு கலை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர தகுதியான நபர்கள் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று குமரி ஆட்சியர் அழகுமீனா கூறியுள்ளார்.
News March 3, 2026
குமரி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

குமரி மாவட்ட மக்களே, <
News March 3, 2026
குமரி: விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் இம்மானுவேல் (50). இவர் டிரைவர் ஆவார். இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக சிறுநீரக பிரச்சனை இருந்து வந்தது. இதனால், மனவேதனையில் இருந்த அவர் பார்வதிபுரம் பகுதியில் களைக்கொல்லி விஷம் மருந்தை குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக, இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.


