News February 26, 2025
பேருந்து மீது கார் மோதல்- 2 பேருக்கு காயம்!

சேலம் மாவட்டம், தலைவாசல் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசு டவுன் பேருந்து பின்புறம், கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு!
Similar News
News September 12, 2025
சேலம்: B.E./B.Tech படித்திருந்தால் வேலை!

சேலம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 – ரூ.1,05,280 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 12, 2025
சேலம் விவசாயிகள் கவனத்திற்கு!

இ-வாடகை கைபேசி செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளம் https://mts.aed.tn.gov.in/evaadagai விண்ணப்பிக்கலாம்
News September 12, 2025
சேலம் அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை மேலும் நீட்டிப்பு!

சேலம் மாவட்டத்தில் கோரிமேடு இருபாலர் ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் ஐடிஐ, கருமந்துறை மகளிர் ஐடிஐ என 4 அரசு ஐடிஐக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐக்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் செப்.30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐடிஐயில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.