News March 9, 2025

பேருந்து நிலையத்தில் கூலி தொழிலாளி பலி

image

க.செல்லம்பட்டையை சேர்ந்தவர் கணேசன். திருப்பூரில் கூலி வேலை செய்து வந்தார். ரேஷன் கடையில் கை விரல் ரேகை பதிவு செய்ய திருப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பஸ்சில் வந்தார். அடுத்த நாள் கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 17ஆம் தேதி மாவட்ட முழுவதும் இருக்கும் அரசு வேலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்களுக்கான சிறப்பு குறைதீர்க்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் வருகின்ற 12ஆம் தேதிக்குள் ஓய்வு பெற்றவர்கள் தங்களின் கோரிக்கைகளை இரண்டு பிரதிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என தகவல்.

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: கடன் தொல்லை நீங்க இங்க போங்க

image

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பாக 4வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் பெருகும் எனது ஐதீகமாக இருக்கிறது. ஷேர்

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: BE/ B.Tech, B.Sc/M.Sc படித்திருந்தால் 1,56,500 வரை சம்பளம்

image

மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டேட்டா அனலிஸ்ட், ஜாவா டெவலப்பர், டேட்டா இன்ஜினியர் போன்ற பல பணிகளுக்கு BE/ B.Tech, B.Sc/M.Sc, CA டிகிரி முடித்த 22-35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் 85,000-1,56,500 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து செப்-30குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!