News November 8, 2024
பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்த அமைச்சர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்ட புறநகர் வழித்தடத்திற்கு 6 புதிய பேருந்து சேவைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று (நவ.8) கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநர் ஜோசப் டயஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 19, 2024
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக கோவையில் இருந்து பீகார் மாநிலம் ப்ரௌனிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (03358), இன்று (நவ.20) நள்ளிரவு 12.50 மணிக்கு பதிலாக சுமார் 5 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக, அதிகாலை 06.00 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 19, 2024
ரேஷன் கடை வேலைக்கு நேர்முக தேர்வு
சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் நவ.28 முதல் டிச.7 வரையும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நவ.7 முதல் நவ.9 வரையும் நடக்கிறது. இந்த நேர்முகத் தேர்வானது, சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.
News November 19, 2024
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், எடப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய 11 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 23,639 பேர் விண்ணப்பித்துள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வாக்காளர் பெயரை நீக்க 4,935 பேரும், திருத்தம் செய்ய 13,534 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.