News May 2, 2024
பேருந்து கதவு கழன்று விழுந்து பெண் காயம்

திருச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பு பிரச்னை, அதிகரித்துக்கொண்டே வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திருமங்கலம் பேருந்து நிறுத்தமருகில் வந்தபோது, அதன் தானியங்கி கதவு திடீரென கழன்று விழுந்தது. இது பேருந்துக்காக காத்திருந்த பெண் மீது விழுந்தது. வலியில் துடித்த அவரை, சக பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 16, 2025
ஆசிரியர்களுக்கு சூப்பர் வாய்ப்பு: 14,967 பணியிடங்கள்

கேந்திரிய வித்யாலயா & நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாகவுள்ள 14,967 ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th, UG, PG உடன் B.Ed (பதவிகளுக்கேற்ப). சம்பளம்: ₹18,900 – ₹78,800 (பணிக்கு ஏற்ப). விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.4. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News November 16, 2025
BREAKING: விடுமுறை அறிவிப்பு வெளியானது.. எங்கு தெரியுமா?

புதுச்சேரியில் 2026ஆம் ஆண்டில் 17 நாள்கள் அரசு விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன.1 ஆங்கில புத்தாண்டு, ஜன.15 பொங்கல், ஜன.16 திருவள்ளுவர் தினம், ஜன.26 குடியரசு தினம், மார்ச் 20 ரம்ஜான் உள்பட 17 நாள்கள் அரசு விடுமுறையாக வருகிறது. முன்னதாக தமிழ்நாடு அரசு 2026-ம் ஆண்டு 24 நாள்கள் பொதுவிடுமுறை என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 16, 2025
PK நிலைமை தான் விஜய்க்கும்: தமிழிசை

லட்சக்கணக்கானோரின் வாக்குகளை SIR பறிப்பதாகவும், தவெக தொண்டர்களுக்கு SIR படிவங்களை அளிக்க மறுப்பதாகவும் <<18296708>>விஜய்<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதையெல்லாம் எப்படி தம்பி நம்புவது என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கட்சி ஆரம்பித்ததும் CM ஆக வேண்டும் என்று நினைத்தால், பிஹாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட நிலை தான் விஜய்க்கும் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.


