News September 27, 2025

பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா? NO WORRY

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 7, 2026

ராணிப்பேட்டை: வாலிபர் துடிதுடித்து சாவு! தொடரும் மர்மம்!

image

சோளிங்கர் அருகே ஆயில் கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் (26), கடந்த 16-ம் தேதி முதல் காணாமல் போயிருந்தார். அவரைப் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் அருகே ஒரு மரத்தில் அவர் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். இது தற்கொலையா? கொலையா என்று போலீசார் விசாரித்த வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 7, 2026

ராணிப்பேட்டை: எமனாக மாறிய ரயிலின் படிக்கட்டு

image

ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சதீஷ் (27), ஈரோட்டில் வேலை தேடிவிட்டு ரயிலில் ஊர் திரும்பியபோது, மேலஆலத்தூர்-குடியாத்தம் இடையே படிக்கட்டில் அமர்ந்து பயணித்தபோது தவறி விழுந்து பலியானார். தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 7, 2026

ராணிப்பேட்டை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி: சிக்கிய பெண் அலுவலர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் சரண்யா தேவி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று (ஜன.5) திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, ஜன்னல் வழியாக வீசப்பட்ட பார்சலில் இருந்து ஒரு கிராம் தங்க நாணயம் மீட்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ. 25,000 ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரிகள், 15 செட் பேண்ட்-சர்ட் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன .

error: Content is protected !!