News September 26, 2024
பேருந்தில் லேப்டாப் மற்றும் 3 கிராம் தங்கம் மாயம்

பழனி ஆயக்குடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் சந்தோஷ் குமார் வயது 29. இவர் பழனியில் இருந்து திருப்பூர் பேருந்தில் ஏறி பெங்களூரு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் இருந்த தனது லேப்டாப் மற்றும் 3 கிராம் தங்கம் மோதிரம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் சந்தோஷ் குமார் புகார் அளித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
திருப்பூர் மக்களே பயப்புடாதீங்க!

திருப்பூர் மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். erolls.tn.gov.in/blo என்ற இணையதளத்தில் உங்கள் ஏரியாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் அலுவலரின் செல்போன் எண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அலுவலர் எப்போது வருவார் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். (SHARE)
News November 10, 2025
திருப்பூரில் தவறி விழுந்தவர் பலி

திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்து ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த, திருப்பூர் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் GH-க்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், இறந்தவர் அந்த பகுதியை சேர்ந்த நாகராஜ் (58) என்பதும், வலிப்பு ஏற்பட்டு கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
News November 9, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 09.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், அவிநாசி பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.


