News July 10, 2025

பேருந்தில் மீதி சில்லறையை வாங்க வில்லையா? கவலை வேண்டாம்

image

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9445021208). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க*

Similar News

News August 25, 2025

பூந்தமல்லி: குறைகளை சொல்ல ஸ்கேன் பண்ணுங்க

image

திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில் மக்கள் தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்க QR கோடு அறிமுகம் செய்துள்ளார். இதை ஸ்கேன் செய்தால், ‘நம்ம ஊரில்; நம்ம எம்.பி.,’ என்ற பக்கத்திற்கு செல்கிறது. அங்கு மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இதை மக்களிடம் கொண்டு செல்ல தற்போது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், போஸ்டர் ஒட்டியும், சமூக வலைதளங்களில் பதிவேற்றியும் வருகின்றனர்.

News August 25, 2025

திருத்தணியில் குவிந்த பக்தர்கள்

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள புகழ்பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் நேற்று வார விடுமுறை என்பதால், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற அதிகளவில் பக்தர்கள் வந்திருந்து வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

News August 24, 2025

திருவள்ளூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!