News April 5, 2025
பேருந்தில் ஊர் பெயர், எண் பதிக்க கோரிக்கை

அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் பின்பக்கம் உள்ள தடம் எண் மற்றும் ஊர் பெயர் பலகையை, பணிமனை ஊழியர்கள் முறையாக பராமரிக்கவில்லை எனப்படுகிறது. எனவே, தடம் எண் மற்றும் ஊரின் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்களை சரியாக எழுத கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News April 11, 2025
முதல்வரின் மாநில இளைஞர் விருது: விண்ணப்பிக்க அழைப்பு

காஞ்சியில் முதல்வரின் மாநில இளைஞர் விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருது வெல்பவர்களுக்கு , 1 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது . விண்ணப்பதாரர்கள் www.sdat.tn.gov.inல், இணையதளம் வாயிலாக ஏப்ரல் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . மேலும், விபரங்களுக்கு 74017 03481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்
News April 11, 2025
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய எண்கள்

மாவட்ட ஆட்சியர் – 044-27237433,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 044-27237424,
மாவட்ட வருவாய் அலுவலர் – 044-27237945,
காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் – 9445000413,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் – 044-27237153,
காவல் கண்காணிப்பாளர் 044-27238001,
டிஐஜி – 04427239009,
மாவட்ட மின்வாரியம் – 9444371912,
மாநகராட்சி – 044-27223593,
விவசாய இணை இயக்குநர் – 044-27222977
News April 11, 2025
சாலையை கடக்க முயன்றவர் லாரி மோதி பலி

படப்பை டேவிட் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (89). இவர், நேற்று முன்தினம் (ஏப்ரல் 9) இரவு படப்பை பஜார் பகுதியில் உள்ள வண்டலுார் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி, லட்சுமணன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் போலீசார் லாரி ஓட்டுநர் அஷ்ரப் அலியை (30) கைது செய்தனர்.