News May 5, 2024
பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

பூந்தமல்லியில் இருந்து நேற்று மதியம் காஞ்சீபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று நசரத்பேட்டை அருகே திடீரென பிரேக் போட்டதால் பேருந்து படியில் நின்று கொண்டிருந்த நடத்துனர் முருகன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் சகாதேவன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News July 5, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News July 5, 2025
பிரசித்திபெற்ற பைரவர் கோயில்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆகாஸ பைரவர் ஆலையம் உள்ளது. இந்த கோயிலின் சிறப்பே அஷ்ட பைரவர்கள் எட்டு பைரவர்கள் உள்ளனர். ஒரே இடத்தில் இந்த 8 பைரவர்களை தரிசனம் செய்யும் அற்புத தலமாக உள்ளது. மேலும், தொலைந்த பொருளை மீட்க, செல்வம் பெருக இங்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் திருமணத்தடை நீங்க ஞாயிறு அன்று ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
News July 5, 2025
ஆரம்பாக்கம் பகுதி நெடுஞ்சாலை சாலையில் ஆக்கிரமிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பஜார் பகுதி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள, இணைப்பு சாலையில் சிறு வியாபாரிகள் காய்கறிகள் பழங்கள் பூ மாலைகள் என வியாபாரம் செய்ய பந்தல் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இணைப்பு சாலை வழியாக அரசு பேருந்துகள் செல்ல முடியாத நிலை, தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செல்கிறது. எனவே வியாபாரிகளுக்கு மாற்றிடம் தந்த போக்குவரத்து துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுப்பு.