News January 20, 2026
பேரவையில் மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார் கவர்னர்

2026-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆனால் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என கூறி கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார். இதனை கண்டித்த CM ஸ்டாலின், கவர்னரின் செயல் அவையின் மரபிற்கு அவமதிப்பு எனவும், ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்றார். இதனால் கவர்னர் உரை வாசிக்கப்பட்டதாக கருதப்படுவதாக CM ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.
Similar News
News January 30, 2026
அனைத்து பள்ளிகளில் இலவச நாப்கின் வழங்க SC உத்தரவு

மாதவிடாய் காலத்தில் பெண்களின் சுகாதாரம் தொடர்பான மத்திய அரசின் கொள்கையை அமல்படுத்தக் கோரி, SC-யில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கவும், மாணவிகளுக்கென தனிக் கழிப்பறையை உறுதி செய்யவும் SC உத்தரவிட்டுள்ளது. மேலும், இதை அமல்படுத்தவில்லை என்றால், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
News January 30, 2026
தங்கம், வெள்ளி: ஒரே நாளில் விலை ₹20,000 குறைந்தது

தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு இன்று மகிழ்ச்சியான நாள். 22 கேரட் தங்கம் இன்று மட்டும் <<19003040>>சவரனுக்கு ₹7,600 குறைந்தது<<>>. இதேபோல், வெள்ளி கிலோவுக்கு காலையில் ₹10,000 சரிந்த நிலையில், மாலையில் மேலும் ₹10,000 குறைந்துள்ளது. தற்போது, வெள்ளி 1 கிராம் ₹405-க்கும், 1 கிலோ ₹4.05 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று கடும் உயர்வை சந்தித்த தங்கம், வெள்ளி விலை இன்று பெருமளவில் சரிந்திருக்கிறது.
News January 30, 2026
சீனிவாசன் காலமானார்.. CM ஸ்டாலின் அஞ்சலி

இந்திய கபடி Ex வீரரும், PT உஷாவின் கணவருமான <<18998431>>சீனிவாசன்(64)<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் எனத் தெரிவித்த அவர், தங்கள் அன்புக்குரியவரின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் PT உஷா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு வீரர்கள் பலரும் இரங்கல் கூறி வருகின்றனர். RIP


