News February 7, 2026
பேச்சுவார்த்தை குழு அமைக்க திணறுகிறதா திமுக?

கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக முன்னேறி செல்ல, காங்கிரஸின் நெருக்கடியால் திமுக திணறி வருகிறதாம். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய பேச்சுவார்த்தை குழு விரைவில் அமைக்கப்படும் என ஸ்டாலின் கூறி 3 நாள்கள் ஆகியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. என்னவென்று விசாரித்தால், தேர்தலில் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை கூட சொல்லாமல் காங்., இழுத்தடித்து வருகிறதாம். அதனால் CM-க்கு ஏக வருத்தமாம்.
Similar News
News February 14, 2026
வீட்டிலிருந்தே சிவராத்திரி வழிபாடு.. எப்படி?

மகா சிவராத்திரி அன்று கோயிலுக்கு செல்ல முடியாவிட்டாலும், வீட்டிலிருந்தே சிவனை வழிபடலாம். இரவு சிவனை மனதில் நினைத்து, சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்யவும். இந்த நேரத்தில் பூமியை நோக்கி பாயும் கதிர் வீச்சானது நமது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், வீட்டிலிருந்தே சிவராத்திரி நன்மையை பெற முடியும்.
News February 14, 2026
நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. ஹேப்பி நியூஸ்

மகளிர் வங்கிக் கணக்கில் ₹5,000 டெபாசிட் செய்து TN அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் வாக்குறுதிக்காக மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையுள்ள நகைக் கடன் விவரங்களை TN அரசு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நகைக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 14, 2026
விஜய் – த்ரிஷா சர்ச்சை.. கமல் ரியாக்ஷன்

<<19135589>>விஜய் – த்ரிஷா<<>> குறித்த நயினாரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. ஏற்கெனவே தவெக, திமுக, விசிக கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில், இதுபற்றி கமல்ஹாசன் MP ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார். விஜய்யை ஒரு நடிகையுடன் சேர்த்துவைத்து நயினார் பேசியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது அவங்க அரசியல்; என் அரசியல் இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


