News October 27, 2024
பேச்சுப் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த இளம்பெண்

சென்னை கலைஞர் அரங்கத்தில், இன்று (அக்.27) திமுக இளைஞரணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ‘என் உயிரினும் மேலான’ எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில், செங்கல்பட்டைச் சேர்ந்த இளம்பெண் சிவரஞ்சனி கலந்து கொண்டு தனது அசாதாரணமான பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினார். இறுதியில், 2ஆவது இடத்தை பிடித்து அசத்தினார். இவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News August 10, 2025
மதுராந்தகம் அருகே போலி மருத்துவர் கைது

மதுராந்தகம் அருகே மேலவளம்பேட்டையில் மருத்துவம் படிக்காமல் பிரகாஷ் என்பவர் மருத்துவராகப் பணியாற்றுவதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, மருத்துவப் பணிகள் இயக்குநர் மலர்விழி, மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரகாஷின் ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவை போலியானவை எனத் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் பிரகாஷைக் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
News August 9, 2025
செங்கல்பட்டு: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு

செங்கல்பட்டு இளைஞர்களே, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் விதமாக, தமிழக அரசு இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, Coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இதற்கான வகுப்புகள் சென்னையில் நடைபெறுகிறது. இங்கே <
News August 9, 2025
செங்கல்பட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை திறப்பு

செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியம் பகுதியில் ரூ.145.41 கோடி செலவில் 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனையின் உள் கட்டமைப்புகளை அவர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.