News April 22, 2024

பேச்சிப்பாறை அருகே மரம் விழுந்து கார் சேதம்

image

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை உள்ளிட்ட மலை பகுதிகளில் நேற்று(ஏப்.21) மாலை பெய்த பலத்த மழையில், சமத்துவபுரம் பகுதியில் நின்ற பலாமரம் முறிந்து விழுந்தது. அப்போது, இடலாக்குடியில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கார் மீது மரம் விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த பெண்கள் உள்பட 4 பேரும் உயிர் தப்பினர். அந்த பகுதியில் இருந்தவர்கள் சேர்ந்து காரில் இருந்தவர்களை மீட்டனர்.

Similar News

News April 18, 2025

குலசையில் 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன

image

இஸ்ரோ தலைவர் நாராயணம் இன்று நாகர்கோவில் வந்தார். அவரை இஸ்ரோ விஞ்ஞானிகள் வரவேற்றனர். பின்னர் அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கான 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என்று கூறினார்.

News April 18, 2025

நாகர்கோவிலில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

நாகர்கோவிலில் உள்ள சாப்டுவேர் நிறுவனத்தில் Analyst – Research பிரிவில் 50 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதில் இளங்கலைப் பொறியியல் படித்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலா. மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும் நிலையில் விண்ணப்பிக்க விருப்புவர்கள் இங்கே<> கிளிக் <<>>செய்து ஏப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 18, 2025

குமரி: ரயில் பயணிகளுக்கு பிரத்யோக செயலி

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும்,ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இங்கே <>கிளிக் <<>>செய்து பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும். SHARE

error: Content is protected !!