News December 17, 2025

பேசாமல் இருப்பது என்ன அரசியல்?.. விஜய் மீது சாடல்

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மீது அண்ணாமலை அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விஜய் பேசாமல் இருப்பது என்ன மாதிரியான அரசியல் என்றும், இவ்வளவு பிரச்னை நடந்தும் இப்படி அமைதியாக இருந்தால் மக்கள் எப்படி அவருக்கு ஓட்டு போடுவார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும் எனவும் அண்ணாமலை அறிவுரை வழங்கியுள்ளார்.

Similar News

News December 18, 2025

பிரதமர் மோடி ராஜினாமா செய்தாரா? FACT CHECK

image

மோடி தனது PM பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக “4PMNewsNetwork” என்ற யூடியூப் சேனலில் செய்தி வெளியானது. SM-ல் இந்த தகவல் பரவத் தொடங்கியதை அடுத்து, இதுகுறித்து மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB Fact Check) விளக்கம் அளித்துள்ளது. இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், சந்தேகத்திற்கிடமான காணொலிகளை 8799711259 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 18, 2025

BREAKING: மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. மேலும், இன்று முதல் 22-ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2-3 °C குறைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

News December 18, 2025

PHOTO OF THE DAY.. இந்திய கிரிக்கெட் ஜெர்சியில் மெஸ்ஸி!

image

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு ICC தலைவர் ஜெய்ஷா, இந்திய T20 அணியின் ஜெர்சியை பரிசளித்துள்ளார். அதனை அணிந்தபடி மெஸ்ஸி இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. கிரிக்கெட், கால்பந்து என இரு விளையாட்டு ரசிகர்களும், ‘இதுதான்டா PHOTO OF THE DAY’ என கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த 13-ம் தேதி இந்தியா வந்த மெஸ்ஸி கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், மும்பை நகரங்களுக்கு விசிட் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

error: Content is protected !!