News April 12, 2024
பொதுமக்களுக்கு அழைப்பிதழ்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுமித்ரா உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் இன்று திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட அந்தியூர் தொகுதி, கடுக்காம்பாளையம் கிராமத்தில் உள்ள கடைகள் விவசாய நிலங்களில் வேலை செய்யக்கூடிய விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் வரும் 19ஆம் தேதி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கினர்.
Similar News
News February 2, 2026
ஈரோட்டில் முற்றிலும் இலவசம்!!!

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பிப். 09 முதல் பிப்.24 ஆம் தேதி வரை Jute Bags, Files, Ladies Bags, Wallets தயாரித்தல் பயிற்சி நடைபெறுகிறது.பயிற்சி, சீருடை, உணவு, ஹாஸ்டல் வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 8778323213,0424-2400338 SHAREIT
News February 2, 2026
அம்மாபேட்டையில் தட்டி தூக்கிய போலீஸ்: அதிரடி கைது!

அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூனாச்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் வயது 41 அவர் கர்நாடக மாநில மது பாட்டில்கள் குட்கா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 2, 2026
ஈரோட்டில் பெரும் முறைகேடா?

ஈரோடு அருகே காரைவாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் லுங்கி குடோன் உள்ளது. அங்கு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் அங்கு வந்த ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இது குறித்து எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, இதனால் மக்கள், ஊடகத்தினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


