News March 29, 2025
‘பெல்’ நிறுவனத்தில் வேலை; ரூ.84,000 சம்பளம்

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின்(BHEL)பெங்களூர் பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள்- 33, வயது வரம்பு: அதிகபட்சம் 32. கல்வி தகுதி: எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேசன் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு. திட்ட இன்ஜினியர் பதவிக்கு ரூ.84,000 சம்பளம். இந்த லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யலாம்
Similar News
News April 2, 2025
CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. <
News April 2, 2025
ராணிபேட்டை SC/ST மாணவர்களுக்கு அறிவிப்பு

ராணிப்பேட்டை ஆட்சியரகத்தில் வரும் ஏப்.5ஆம் தேதி SC/ST மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தினை உயர்த்தும் நோக்கத்தோடு 11 (ம) 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். *SHARE TO FRIENDS
News April 2, 2025
ராணிப்பேட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் தவணை நிதி பெற, வேளாண் அடுக்குத் திட்டத்தில் எந்தவித கட்டணமும் இன்றி வரும் 15ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையம் ஆகியவற்றை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். *இன்னும் 13 நாட்களே உள்ளன. உங்கள் விவசாய நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*