News January 13, 2026
பெற்றோரை கைவிட்டால் சம்பளத்தில் 15% பிடித்தம்!

தங்களது பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% வரை பிடித்தம் செய்ய வழிவகை செய்யும் மசோதாவை உடனே கொண்டுவர உள்ளதாக தெலுங்கானா CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். இக்காலத்தில் வயதான பெற்றோரை கைவிடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அப்படி பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் என்ற ரேவந்த் ரெட்டியின் அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
Similar News
News April 8, 2026
IPL: இன்றும் மழைக்கு வாய்ப்பு

IPL-ல், இன்று DC, GT அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதுகின்றன. ஏற்கெனவே KKR Vs PBKS, RR Vs MI அணிகள் இடையிலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4-6 மணி வரை 15% மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
News April 8, 2026
தவெகவுடன் கூட்டணி.. கடைசி நேரத்தில் பரபரப்பு

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி விரும்பியதாக ஆதவ் ஆர்ஜுனா முக்கிய தகவலை கூறியுள்ளார். ஆனால், ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் டெல்லி சென்று இந்த கூட்டணி அமையவிடாமல் தடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் உடன் கூட்டணி அமையாவிட்டாலும், அந்த ஓட்டுகள் தவெகவுக்கு கிடைத்துவிடும் என்றும் ஆதவ் பேசியுள்ளார். இதுபற்றி உங்க கருத்து?
News April 8, 2026
இந்தியர்கள் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தல்

ஈரானில் அதிகரித்து வரும் போர் பதற்றம், பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. எந்தவித ஆலோசனையும் இன்றி சர்வதேச எல்லைகளுக்கு செல்லக்கூடாது என்றும், உதவிக்கு இந்த எண்களை +989128109115, +989128109109 +989128109102, +989932179359 தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


