News May 26, 2024

பெற்றார் கண்டித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை

image

வடபழனி பக்தவச்சலம் முதல் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மூத்த மகள் மதுமிதா (15). பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறையில் இருக்கிறார். இந்நிலையில், இவர் வீட்டில் செல்போனை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆறுமுகம் மகளை கண்டித்துள்ளார். இதனால் மனவருத்தமடைந்த சிறுமி நேற்று காலை பேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

சென்னை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News November 24, 2025

சென்னை- ஹதாராபாத் இடையிலான 780 கி. மீ புல்லட் ரயில்!

image

சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையிலான 780 கி.மீ புல்லட் ரயில் பாதைக்கான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மத்திய தெற்கு ரயில்வே சமர்ப்பித்தது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் 12 மணி நேரத்திலிருந்து தோராயமாக 2.5 மணி நேரமாகக் குறையும்.

News November 24, 2025

சென்னை: விரல் நுனியில் ரேஷன் விவரங்கள்!

image

தமிழ்நாடு குடும்ப அட்டைதாரர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி தான் TNePDS மொபைல் செயலி. இதன் மூலம் உங்களுடைய ரேஷன் கடையில் என்ன பொருட்கள் உள்ளன என்ற இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளலாம். அதே சமயம், தங்களின் ரசீதுகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இந்த செயலியை <>இங்கே <<>>க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த தகவலை உடனே பகிருங்கள்.

error: Content is protected !!