News June 4, 2024
பெரும் பின்னடைவில் அதிமுக வேட்பாளர்

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் பிரதான கட்சியான அதிமுக கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றார். இந்த நிலையில் திருநெல்வேலியில் பெரும் தோல்வியை அதிமுக சந்திக்கும் என கருதப்படுகின்றது.
Similar News
News July 6, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

நெல்லை மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10, 12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <
News July 6, 2025
மேலும் 4 தொழில் பூங்கா அமைகிறது

கங்கைகொண்டான் சிப்காட்டில் தொழில் பூங்கா வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மேலும் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து நாங்குநேரி வட்டாரம் மறுகால் குறிச்சி, திருவரமங்மைபுரம் ஆகிய பகுதிகளில் 2260 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. கங்கைகொண்டான் மற்றும் மூலைக்கரைப்பட்டியிலும் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
News July 5, 2025
நெல்லை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும் இன்று (ஜூலை 05) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.