News November 15, 2025

பெருமாள் கோவில் கரட்டில் அழுகிய ஆண் சடலம்!

image

சேலம் கோல்நாயக்கன்பட்டி பெருமாள் கரடு பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. உடனடியாக மேட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதில், ரெட்டியூர் காலணியை சேர்ந்த கூலித் தொழிலாளி குப்பன் (57) என்பதும் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Similar News

News November 15, 2025

சேலம்: வாக்காளர் திருத்தம் எளிதாக அறியலாம்!

image

சேலம் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News November 15, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையான சிறார்களை மீட்டு நல்வாழ்வு படுத்துவதற்கான போதை மீட்பு மறுவாழ்வு மையம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மையம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 25ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 15, 2025

போதையில் அரசு பஸ்சை வழி மறைத்த இரண்டு பேர் கைது!

image

கெங்கவல்லி 4 ரோடு பகுதியில் உள்ள பூக்கடை முன்பு இன்று திருச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த அரசு பஸ்சை ஆணையம்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி (23) லாரி ஓட்டுனர் இவருடைய நண்பர் பெரியசாமி மகன் பாலாஜி (25) இருவரும் மது போதையில் அரசு பஸ்சை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக கெங்கவல்லி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!