News March 24, 2026

பெரிய லாபத்தில் முடிந்த சந்தைகள்!

image

பங்குச்சந்தைகள் நல்ல உயர்வுடன் இன்று வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 1,372 புள்ளிகள் உயர்ந்து 74,068 புள்ளிகளிலும், நிஃப்டி 399 புள்ளிகள் உயர்ந்து 22,912 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக Eternal, Larsen, Asian Paints உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 5% வரை உயர்ந்தன. நேற்று பெரிய வீழ்ச்சியடைந்த நிலையில், இன்று கண்ட ஏற்றம் பலருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.

Similar News

News March 31, 2026

BREAKING: விலகினார்.. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி

image

சீட் மறுப்பால் பல நிர்வாகிகள் கட்சிகளில் இருந்து விலகி வருகின்றனர். அந்தவகையில், திமுக Ex MP சண்முகத்தின் மகனும், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளருமான சுரேஷ்குமார், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில ஆதிக்க சக்திகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக, அவர் தலைமைக்கு எழுதிய விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நிர்வாகிகள் விலகுவது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

News March 31, 2026

சிலிண்டர் புக்கிங்கால் சிக்கிய தலைமறைவு குற்றவாளி

image

ம.பி.,யில் மனைவியை கொன்ற வழக்கில், 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த Ex ராணுவ கேப்டனை கேஸ் புக்கிங்கை வைத்து போலீஸ் கைது செய்துள்ளனர். 2013-ல் மனைவியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு, 2022-ல் ஐகோர்ட் தண்டனையை உறுதிசெய்தது. அதன்பிறகு சரணடையாமல் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில்தான் கேஸ் புக்கிங் செய்த சந்தீப்பின் Bank Account-ஐ போலீஸ் டிராக் செய்து கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

News March 31, 2026

விஜய்க்கு மட்டும் ஓட்டு போடாதீங்க: SP வேலுமணி

image

கோவை தெற்கில் வெற்றி பெறுவது அதிமுகவுக்கு மான பிரச்னை என SP வேலுமணி பேசியுள்ளார். கோவை தெற்கு வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து பேசிய அவர், திமுக எதிர்ப்பு ஓட்டுகளை குறிவைத்து, விஜய் திமுக எதிர்ப்பு அரசியல் செய்கிறார் என குற்றம்சாட்டினார். மற்ற எந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டாலும் திமுகவுக்கு சாதகமாக மாறும் என்றவர், குறிப்பாக விஜய்க்கு ஓட்டுப்போடாதீர்கள் என கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!