News June 15, 2024
பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

சேலம் பெரியார் பல்கலைக் கழக கூடுதல் பொறுப்பிற்காக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மற்றும் கதிரவன் ஆகியோருக்கு 50 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த தொகை மீது உரிய விசாரணை நடத்தி அதை மீண்டும் பல்கலைக்கழக நிதியில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News March 1, 2026
சேலம்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
சேலம் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 1, 2026
ஆத்தூரில் அடுத்தடுத்து தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்!

பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சந்துரு-வைஷ்ணவி மற்றும் கடம்பூர் சங்கவி-ராஜா ஆகிய இரு காதல் ஜோடிகளும், பெற்றோரின் எதிர்ப்பால் கோவில்களில் திருமணம் செய்துகொண்டு நேற்று ஆத்தூர் காவல் நிலையங்களில் பாதுகாப்பு வேண்டி தஞ்சமடைந்தனர். இதையடுத்து, இருதரப்பு பெற்றோர்களையும் நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய அறிவுரைகளை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தனர்.


