News February 25, 2025
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணி நேர்காணல் ஒத்திவைப்பு

மார்ச் 1ஆம் தேதி நடைபெறவிருந்த சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. தனக்கு ஆதரவான குறிப்பிட்ட நபரை பதிவாளராக கொண்டு வர துணைவேந்தர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அடுத்து பதிவாளர் பதவிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News February 25, 2025
சேலம்: ஸ்டாலின், விஜய் மகன் ஒரே விமானத்தில் வருகை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் விமான மூலம் சேலம் வருகை. பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் வருகை புரிந்த அதே விமானத்தில் விஜயின் மகன் வருகை புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News February 25, 2025
சேலத்தில் முதல்வருக்கு புத்தகம் வழங்கல்

பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.25) சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன் அப்பாதுரை ‘மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்’ புத்தகத்தை வழங்கி வரவேற்றார்.
News February 25, 2025
சேலத்தில் ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இத்திருமணம் விழாவில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.25) சேலம் வந்த முதலமைச்சர் திருமண தம்பதிகளை மரம் கொத்து கொடுத்து வாழ்த்தினார். உடன் அருள் எம்எல்ஏ, சதாசிவம் எம்எல்ஏ மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் இருந்தனர்.