News October 25, 2025
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் புதிய வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்புல்லாணி ஊராட்சி, குதக்கோட்டையில் 2023–2024 ஆண்டு ஒதுக்கீட்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டு வருகிறது. 100 வீடுகளுக்கு பயனாளிகள், தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். (நவ, 5) மாலை 5 மணிக்குள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டாரவளர்ச்சி அலுவலரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
ராம்நாடு: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
News October 25, 2025
பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி (அக்-27) புயலாக மாற வாய்ப்புள்ளது. இதற்கு மோன்தா புயல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது பாம்பன் கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு தொலைதூர புயல் எச்சரிக்கையானது மீனவர்களுக்கு விடப்பட்டுள்ளது.
News October 25, 2025
ராம்நாடு: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) ராமநாதபுரம் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்


