News March 10, 2025

பெரியப்பாவை கொன்ற வாலிபர் கைது

image

சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ரவி (45). தனது தம்பியின் மகன் காமேஷ் (23) மூலம் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். அவரை தடுக்க முயன்ற நரசிம்மன் (70) படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விசாரணையில் போதை பழக்கத்திற்கு அடிமையான காமேஷ், சென்னேரி வனப்பகுதியில் மறைந்திருந்தது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News September 29, 2025

மாவட்ட போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், படாளம்-புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலப் பணி நடப்பதால், அவ்வழியைத் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாகன நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் மாற்று வழியில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News September 29, 2025

செங்கல்பட்டு: கண் நோயை குணமாகும் சீனிவாச பெருமாள்

image

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செம்மஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது 1500 ஆண்டுகள் பழமையான செம்மஞ்சேரி சீனிவாச பெருமாள் கோயில். இங்குள்ள சீனிவாச பெருமாளை வணங்குவதன் மூலம் கண் தொடர்பான பிரச்சினைகள் குணமடைவதாக நம்பப்படுகிறது. ஒரு பல்லவ மன்னன் தனது இழந்த பார்வையை இங்கு வழிபட்டு மீண்டும் பெற்றதாகத் தல புராணம் கூறுகிறது. இன்றும் பலர் கண் சம்பந்தமான கோளாறுகளுக்கு இங்கு வந்து வழிபடுகிறார்கள். ஷேர் பண்ணுங்க

News September 29, 2025

ALERT: செங்கல்பட்டில் இன்று கனமழை வெளுக்கும்

image

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (செப்.29) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் ரெயின் கோர்ட், குடையுடன் முன்னெச்சரிக்கையா இருங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!