News July 10, 2025

பெரியகுளம் அருகே வீடு புகுந்து பணம் திருட்டு

image

தேனி மாவட்டம் ,பெரியகுளம் அருகே எ .புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விமால் (32 வயது). அரசு ஒப்பந்ததாரர். இவர் நேற்று முன்தினம் பணிக்கு சென்றுள்ளார். அவரது மனைவி பிரியா கார் ஓட்டும் பயிற்சிக்காக சென்றுள்ளார். மர்ம நபர்கள் வீட்டினருகே மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து, ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை திருடி சென்றனர். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News July 10, 2025

தேனி விவசாயிகளே: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

image

தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மானியத்தில் 40% மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகின்றன. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க உழவன் செயலி (Ulavan App) வழியாக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.மேலும் விரிவான தகவல்களைப் பெற, தேனி மாவட்டத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News July 10, 2025

1996 முதுநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்!

image

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து இன்று முதல் ஆக.12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது. இந்த செய்தியை தேவைபடுபவர்களுக்கு Share செய்யவும்.

News July 10, 2025

தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

image

தேனி மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04546-255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்

error: Content is protected !!