News April 6, 2024
பெரியகுளம் அருகே மருத்துவ முகாம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகப்பட்டி வள்ளலார் சத்ய ஞான சபை தர்மச்சாலையில் இன்று கலிக்கம் சித்த மருத்துவ கண் சிகிச்சை சொட்டுநீர் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் ஏராளமான முதியோர்கள் கலந்து கொண்டு, கண்ணை பரிசோதித்து மருத்துவ சொட்டுநீர் செலுத்தி பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வள்ளலார் சத்ய ஞான சபை நிர்வாக குழு பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Similar News
News November 4, 2025
தேனி: வாக்காளர் திருத்த முகாம் ஆட்சியர் அறிவிப்பு

வாக்காளர் திருத்த பட்டியல் சிறப்பு தீவிர முகாம் நாளை 4.11.2025 முதல் 04.12.2025 வரை வீடுவீடாக சென்று கணக்கு எடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது என, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ரஞ்ஜீத் சிங் இன்று தெரிவித்துள்ளார். மேலும் உதவிக்கு 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் அழைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
தேனி: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 228 மனுக்கள்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (03.11.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 228 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் பொதுமக்களிடமிருந்து அளிக்கப்பட்டன.
News November 3, 2025
தேனியில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.4) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன்மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


