News January 9, 2025

பெரவள்ளூர் பகுதியில் வாலிபரை தாக்கி தப்பி ஓட்டம்

image

பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் வர்மன் (25) பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் பகுதிக்கு வசூல் செய்ய சென்றபோது அடையாளம் தெரியாத 3பேர் வழிமறித்து கல்லால் தாக்கியதில் காயம் அடைந்த மனோஜ் வர்மன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு புகாரின் பேரில் அடையாளம் தெரியாதமூன்று பேரை பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 9, 2025

திருவள்ளூர் மாவட்ட ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 9, 2025

திருவள்ளுர்: இணைய வழி மோசடி- கொத்தாக கைது

image

திருவள்ளூர் வேப்பம்பட்டு சேர்ந்த பிஜியின் ஹரால்ட் ராமசாமி, வாட்ஸ்அப் வந்த வர்த்தக விளம்பரத்தை நம்பி, ஆன்லைன் வர்த்தக தளத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என முதலீடு செய்துள்ளார். ரூ.10,25,200/- அனுப்பி பணத்தை திரும்ப எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இணையவழி குற்றப்பிரிவு போலீசார் சிவகங்கை சேர்ந்த 5பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 9, 2025

BREAKING: திருவள்ளூர் வரும் விஜய்

image

2026 ஆண்டு சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும்.13ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் செப்.27-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். (SHARE)

error: Content is protected !!