News February 10, 2026

பெரம்பூர்: வட மாநிலத் தொழிலாளியிடம் பணம் பறிப்பு

image

பீகாரை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவர் சொந்த ஊர் சென்று விட்டு, நேற்று பெரம்பூரில் இருந்து ஆட்டோ மூலம் மாத்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வியாசர்பாடி, கள்ளுக்கடை ஜங்சன் அருகில் ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், இவரை மிரட்டி தாக்கி ரூ.10,000/-ஐ பறித்து சென்றார். புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார், பெரம்பூரை சேர்ந்த விக்னேஷ்வரன் (33) என்பவரை நேற்று கைது செய்தனர்.

Similar News

News February 18, 2026

சென்னை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

சென்னை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE IT)

News February 18, 2026

சென்னை: மழைநீர் வடிகாலுக்கு ரூ.693 கோடி!

image

சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்க ரூ.10கோடி மதிப்பில் பசுமை சென்னை திட்டம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.693 கோடி ஓதுக்கீடு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு, ரூ.323 கோடி, பன்முக ஒருகினைப்பு போக்குவரத்திற்கு ரூ.40 கோடி, அவசர கால கட்டுபாட்டு மைய திட்டத்திற்கு ரூ.5 கோடி, கல்வி வளர்ச்சிக்கு ரூ.11 கோடி, சுகாதார துறைக்கு ரூ.4.35 கோடி, சிறப்பு திட்டங்களுக்கு ரூ.157 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளன.

News February 18, 2026

சென்னை மாநகராட்சியின் 90 அறிவிப்புகள்!

image

சென்னை மாநகராட்சியின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டினை மேயர் பிரியா இன்று(பிப்.18) வாசித்து நிறைவு செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரை சுமார் 1 மணி நேரம் 36 நிமிடங்கள் நீடித்தது. இந்த உரையின் போது மாநகர துறைகள் வாரியாக மொத்தம் 90 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!