News July 25, 2024

பெரம்பூரில் புதிய ரயில் முனையம்

image

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் முனையங்களைத் தொடர்ந்து 4ஆவது ரயில் முனையம் பெரம்பூரில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்பணி ஒரு மாதத்தில் முடியும். அதைத்தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி கோரப்படும். நிதி ஒதுக்கப்பட்டால் அடுத்த 3-4 ஆண்டுகளில் பணி முடிந்துவிடும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 7, 2026

சென்னை: டூவீலர், கார் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 7, 2026

சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <>இந்த இணையதளங்களில் <<>>விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News April 7, 2026

JUST IN: பெரம்பூரில் ஜோசப் விஜய் பெயரில் 5 பேர் போட்டி

image

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் சி.ஜோசப் விஜய் என்ற பெயரில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், ஜி.விஜய், கே.விஜய், எஸ்.ஜோசப், எம்.ஜோசப் என வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. எனவே ஜோசப் விஜய் என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகின்றனர். தவெக தலைவரோடு சேர்த்து 5 பேர் ஜோசப் விஜய் பெயரில் களம் காண்கின்றனர்.

error: Content is protected !!