News December 10, 2025
பெரம்பலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.
Similar News
News December 10, 2025
பெரம்பலூரில் இளைஞர் தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெனித்குமார் (31). இவருக்கும் இவரது மனைவி பாலஅபிராமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜெனித்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
பெரம்பலூர்: மருத்துவ மதிப்பீட்டு முகாம்

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் (0-18) வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, மருத்துவ மதிப்பீட்டு முகாமினை நேற்று (டிச.09) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, மருத்துவ முகாமினை பார்வையிட்டார்.
News December 10, 2025
பெரம்பலூர்: இலவச தையல் பயிற்சி அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி எளம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் டிச.15 முதல் 31 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி பெற 19 வயது முதல் 50 வரை இருத்தல் வேண்டும் எனவும், 13-12-2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மேலும் உதவிக்கு 8489065899 / 9488840328 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.


