News June 4, 2024
பெரம்பலூர்: 7ஆம் சுற்று முடிவு

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. திமுக வேட்பாளர் அருண் நேரு 30,026 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 10,691 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். ஐஜேகே 8331 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 5,308 வாக்குகள் பெற்றுள்ளார்.
Similar News
News September 12, 2025
பெரம்பலூர்: பொது விநியோகம் திட்ட குறைதீர் முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொது விநியோகம் திட்டம் சார்ந்த குறைபாடுகளை தெரிவிப்பதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண பொது விநியோகம் திட்ட குறைதீர் முகாம் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் நாளை (13-09-2025) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மிருனாளினி தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
பெரம்பலூர்: மாணவியை பலாத்காரம் செய்தவபர் கைது

செட்டிகுளம் கடை வீதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (19). இவர் தற்போது பாடாலூரில் வாடகை வீட்டில் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெகதீசன், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக மாணவியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெகதீசனை நேற்று கைது செய்தனர்.
News September 12, 2025
பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் செய்து முடித்துக் கொள்ள அறிய வாய்ப்பாக வரும் செப்.13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு சட்டப்பணி ஆணை குழுவை நேரிலோ அல்லது 04328- 296206/ 04328-291252 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என சட்டப்பணி ஆணைக்குழு மற்றும் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW…