News March 24, 2025

பெரம்பலூர்: 10 நிமிடத்தில் கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர்

image

பெரம்பலூர் ஆட்சியரகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வி. களத்துார் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது 9 வயதான கவினேஷ் என்ற மாற்றுத்திறனாளி மகனுக்கு காதொலிக்கருவி கேட்டு கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையினை பரிசீலனை செய்த கலெக்டர் காதொலிக்கருவி வழங்க அலுவலருக்கு உத்தரவிட்டார். 10 நிமிடத்தில் தனது குழந்தைக்கு காதொலிக்கருவி வழங்கிய ஆட்சியருக்கு மாரியம்மாள் நன்றி தெரிவித்தார்.

Similar News

News September 22, 2025

பெரம்பலூர்: மின் மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2025) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை மின்தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.

News September 21, 2025

தீபாவளிக்கு அதிக கூடுதல் பேருந்து இயக்க மைச்சர் முடிவு

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சா.சி.சிவசங்கர் அவர்களிடம் கேட்டபோது தீபாவளி பண்டிகைக்கு கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவில் பேருந்து வசதி இருக்குமென தெரிவித்துள்ளார். இதைப்பற்றி போக்குவரத்து துறை மேலாண்மை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என்பதையும் தெரிவித்தார்.

News September 21, 2025

பெரம்பலூர்: 12th போதும் அரசு வேலை!

image

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக மாத சம்பளமாக ரூ.38,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க அக்.6ம் தேதி கடைசி தேதியாகும். SHARE IT.

error: Content is protected !!