News May 7, 2024

பெரம்பலூர்: 10 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி!

image

பெரம்பலூர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 6வது இடம் பிடித்தது. இதில் பூலாம்பாடி, அனுக்கூர், நெற்குணம், ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், பேரளி, கவுல் பாளையம், எளம்பலூர், கீழமாத்தூர் மற்றும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News July 5, 2025

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 7ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி முதல் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட மாறுதல் பெறலாம்.

News July 5, 2025

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 40 வருடம் கடுங்காவல் சிறை

image

பெரம்பலூர் மாவட்டம் மருதடி கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக அதே கிராமத்தைச் சேர்ந்த ராகவன் என்பவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை முடித்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு 40 வருடம் சிறை தண்டனை (ம) ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நேற்று நீதிமன்ற உத்தரவிட்டது.

News July 5, 2025

பெரம்பலூர்: 12th போதும், ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து வரும் ஜூலை.18-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!