News August 16, 2025

பெரம்பலூர்: வேளாண்மை உதவி இயக்குநர் எச்சரிக்கை

image

வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள டி.ஏ.பி மற்றும் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை ஆய்வு செய்தார். அப்போது அவர், “உரங்களை மூட்டையில் உள்ள விலைக்கு மேல் அதிகமாக விற்றால் மற்றும் விற்பனை செய்யும்போது அத்துடன் இணைப்பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தினால் விற்பனை உரிமம் ரத்து செய்து, நீதிமன்ற வழக்கு தொடரப்படும். என்று எச்சரித்துள்ளார்.

Similar News

News August 16, 2025

பெரம்பலூர்: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி வேண்டுமா?

image

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

News August 16, 2025

பெரம்பலூர்: கல்லூரி மாணவருக்கு ஆட்சியர் உதவி

image

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் தனது மகன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் நிலையில் தனது கணவர் இறந்துவிட்டதால் குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர இயலாத நிலை என்றும், கல்விக்கட்டணம் கட்ட உதவிடும்படி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையினை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், மாணவன் சஞ்சய்க்கு தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.55,000 வழங்கினார்.

News August 16, 2025

கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

image

பெரம்பலூர் நகரப் பகுதியில் சிவன் கோயில் அருகில் ஆட்டோ டிரைவர் ரவி என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் வழிமறித்து, அருவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். ஆபத்தான நிலையில் ரவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் ஈடுபட்ட கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!