News August 18, 2025

பெரம்பலூர்: வெளிநாட்டில் இருந்து வந்தவர் சாலை விபத்தில் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பரவாய் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (55), வெளிநாட்டில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியிருந்தார். வேப்பூரில் பொருட்கள் வாங்கிவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 9, 2026

பெரம்பலூர்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அடையாள அட்டை: <>voters.eci.gov.in<<>>, 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/, 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க.

News April 9, 2026

பெரம்பலூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

பெரம்பலூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 9, 2026

குன்னம் வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு குன்னம் சட்டமன்றத் தொகுதி சிறுகடம்பூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார். மேலும் வாக்கு சாவடி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளை குறித்தும் கேட்டறிந்தார்.

error: Content is protected !!