News December 11, 2025
பெரம்பலூர்: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

பெரம்பலூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
Similar News
News December 11, 2025
பெரம்பலூர்: சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது சூப்பர் மார்க்கெட் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் ரூ,4.50 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி காசுகளை கொள்ளையடித்து சென்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
News December 11, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை!

பெரம்பலூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (டிச.12) போரளி, மங்கூன், கைகளத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் இருத்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான போரளி, கல்பாடி, அசூர், கே.புதூர், அடைக்கப்பம்பட்டி, மேலைப்புலியூர், அம்மாபாளையம், அய்யனார்பாளையம், நுத்தப்பூர். நெற்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை விநியோகம் இருக்காது.
News December 11, 2025
பெரம்பலூர்: அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை

தமிழ்நாடு முதலமைச்சர் 12.12.2025 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன் தலைமையில் 10.12.2025 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


