News December 27, 2025

பெரம்பலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay<>-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News December 31, 2025

பெரம்பலூர்: காவல் கண்காணிப்பாளர் மாற்றம்

image

தமிழகம் முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்றிரவு (டிச.30) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆதர்ஷ் பச்சேரா, சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மதுரை மாநகரம் (வடக்கு) துணை காவல் ஆணையர் G.S.அனிதா, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News December 31, 2025

பெரம்பலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

பெரம்பலூர்: மஞ்சள் தாலி கயிறுடன் பிரச்சாரம்

image

தங்கத்தின் விலை இறங்கும் வரை மஞ்சள் தாலி கயிற்றை பயன்படுத்த வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்கள் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முகசுந்தரம் தலைமையில், பெண்கள் மஞ்சள் தாலி கயிறை கையில் ஏந்தி தங்கம் விலையை குறைக்கும் வரை தாலிக்கு தங்கம் வேண்டாம், மஞ்சள் தாலி கயிறை பயன்படுத்துவோம் என பிரச்சாரம் செய்தனர்.

error: Content is protected !!