News January 10, 2026
பெரம்பலூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

பெரம்பலூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News January 25, 2026
பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!
News January 25, 2026
பெரம்பலூர்: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவர் கைது

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (42). இவர் மீது பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அவர் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதையடுத்து, மகிளா நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து பாடாலூர் போலீசார் சுதாகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News January 25, 2026
பெரம்பலூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!


