News January 20, 2026

பெரம்பலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 15, 2026

பெரம்பலுர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

பெரம்பலூர்: பறவைக் காய்ச்சல் குறித்து அறிவுறுத்தல்

image

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் நன்கு சமைக்காத முட்டை மற்றும் இறைச்சி உண்பதைத் தவிர்க்க வேண்டும். பாதிப்புள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு ஆட்சியர் மிருணாளினி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்துப் பரவும் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம். கூடுதல் விவரங்களுக்கு 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News February 15, 2026

பெரம்பலூர்: பேருந்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம்

image

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் காரில் சென்றுள்ளார். அப்போது அவரது காருக்கு பின்னால் வந்த, பெரம்பலூர் முதல் சிதம்பரம் செல்லும் தனியார் பேருந்து அளவுக்கு அதிகமாக ஹாரன் அடித்து மோதும் வகையில், அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பேருந்தை ஐஜி பாலகிருஷ்ணன் நிறுத்தி ஹாரனை அகற்றி, பேருந்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம் விதித்தார்.

error: Content is protected !!