News May 7, 2025

பெரம்பலூர்: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் www.unionbankofindia.co.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பேங்க் வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்.

Similar News

News August 11, 2025

பெரம்பலூர்: கிராம உதவியாளர் பணி-இன்றே கடைசி!

image

வேப்பந்தட்டை, பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர் உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு <>இந்த லிங்கிள்<<>> விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இன்றே (11.08.2025) கடைசி தேதியாகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 11, 2025

பெரம்பலூரில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.11) தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதில், 1-5 வயதுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடியிலும், 6-19 வயதுள்ள மாணவர்களுக்கு பள்ளி கல்லூரியிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லாதவர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர்கள் வீடுவீடாக சென்று வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அவர்.

News August 10, 2025

விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்; எஸ்பி ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் நாளை(ஆக.11) விசிகா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டமானது விசிக தலைவர் எம்பி திருமாவளவன் தலைமையில், ஆணவக் கொலையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று அதற்கான இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!